பிலிப்பைன்ஸ் நாட்டில் உருவாகியுள்ள மங்குட் புயலின் பாதிப்பால் பலி எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ககாயன் என்ற மாகாணத்தில் லூஷான் தீவு உள்ளது. இங்கு நேற்று மங்குட் என்று பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியது. மணிக்கு சுமார் 350 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் சூறையாடியது. இதில், பாகுபோ என்ற நகரல் பலத்த சேதத்தை சந்தித்தது.
இதன் எதிரொலியாக பிலிப்பைன்ஸ் அரசு மீட்பு பணிகளை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், ஏராளமான மீட்புப்பபை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த கோர புயலில் சிக்கி இரண்டு மீட்புப்படை வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புயலின் தாக்கம் எதிரொலியால், மழை, நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், பலி எண்ணிக்கு கிடுகிடுவென 64 ஆக உயர்ந்தது.
மங்குட் புயல் தாக்கத்தின் எதிரொலியாக, விமானம், கடல் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பள்ளிகளுக்கும் விடுமுறை அறவிக்கப்பட்டுள்ளது.