சவூதியில் ஆயிரக்கணக்கான இந்திய தொழிலாளர்கள் இன்று முதல் வேலையை இழக்க துவங்கினர் என்ற செய்தியால் இந்தியர்கள் மத்தியில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்தியர்கள் இதுவரை அனுப்பிய அன்னியசெலவானி வருமானம் கேள்விகுறியாகியுள்ளது.
சவூதி மக்களை வேலைக்கு அமர்த்தும் பணிகள் துவங்கின. 800-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சவூதியின் பல்வேறு இடங்களில் சோதனையை துவக்கினர். இது தொடர்பான சோதனைகளை கடுமையாக நடத்தும்படி அந்நாட்டு தொழிலாளர் துறை அமைச்சகம் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதிய தொழிலாளர் சட்டத்தின்படி கடையில் வேலை செய்யும் நபர் ஒருவராக இருந்தால் அது கண்டிப்பாக சவூதி குடிமகனாக இருக்க வேண்டும் என்பது சட்டம். இதுபோல் இரண்டு பேர் என்றால் ஒருவர் நபர் சவூதி குடிமகனாக இருக்க வேண்டும். 4 பேர் என்றால் 2 பேர் சவூதி நபராக இருக்க வேண்டும். 10 பேர் என்றால் 7 பேர் சவூதி நபராக இருக்க வேண்டும். 30 பேர் என்றால் 21 பேர் சவூதி நபராக இருக்க வேண்டும். 100 பேர் என்றால் 70 பேர் சவூதி நபராக இருக்க வேண்டும்.
இப்படி தொடர்கிற பட்டியலில், முதல் கட்டமாக ரெடிமேட் கடைகள், மோட்டார் சைக்கிள் கடைகள், சமையல் அறை உபகரணங்கள் விற்பனை கடைகள் மற்றும் பர்னிச்சர் கடைகள் ஆகிய நான்கு துறைகளில் 70 சதவீதம் சவுதி மக்களை வேலைக்கு அமர்த்த முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சட்ட மீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் 20,000 ரியால் பிழை (Fine) மற்றும் சவூதி தொழிலாளர்கள் சட்டங்கள் மீறியதற்கான சட்ட நடவடிக்கைகளையும் சந்திக்க வேண்டும். மேலும் வரும் ஜனவரி 2019 முடிவதற்குள் 12 துறைகளில் சவூதி மக்களை வேலைக்கு அமர்த்தும் பணிகளை முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரும் நவம்பர் முதல் Watch விற்பனை கடைகள், முகக் கண்ணாடி கடைகள், electrical and electronics விற்பனை கடைகள், Medical உபகரணங்கள், வாகனத்தின் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள், Bakery கடைகள், கட்டுமான விற்பனை கடைகள் மற்றும் கார்பெட் சாதனங்கள் விற்பனை கடைகள் ஆகியவைகளிலும் சவூதி மக்களை வேலைக்கு அமர்த்தும் பணிகள் துவங்கும்.
அனைத்து துறைகளிலும் சவூதி மக்களை வேலைக்கு அமர்த்தும் வேலை ஜனவரிக்குள் முடிந்தால் இந்தியா மற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பது உறுதியானது.
இந்த புதிய நடைமுறையால் சிறு தொழில் செய்யும் வெளிநாட்டு நபர்கள் நடத்தும் அனைவரும் கடைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சவூதியின் பல இடங்களில் கடந்த வாரம் முதலே கடைகளை பலர் மூடிவிட்டனர் என்ற தகவல் இந்தியர்கள் குறிப்பாக கேரள மக்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்திள்ளது. தற்போதுதான் புயலின் பாதிப்பிலுருந்து இருந்து மீண்டு வருகின்றனர் அதற்குள் மற்றோரு புயலாக வேலை பிரச்சனை.