தான்சானியாவின் பேரழிவு...பலி எண்ணிக்கை 209 ஆக அதிகரிப்பு.

தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது

by Vijayarevathy N, Sep 23, 2018, 14:03 PM IST

தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் ஏற்பட்ட படகு விபத்தில் பலி எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தான்சானியாவின் விக்டோரியா ஏரியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் பலி எண்ணிக்கை தற்போது 209ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நீரில் மூழ்கியவர்களின் தேடுதல் பணி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து மீட்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், 101 பேர் மட்டுமே ஏற்றக் கூடிய படகில், இத்தனை பேரை ஏன், எப்படி ஏற்றினார்கள் என்று தெரியவில்லை. இந்த விபத்தில் 40 பேரை பாதுகாப்பாக மீட்டுள்ளோம் என்றனர். இவ் விபத்திற்கு யாரெல்லாம் காரணமோ, அவர்களைக் கைது செய்ய தான்சானியா அதிபர் ஜான் மகுஃபுலி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏற்கனவே முறையாக பயிற்சி பெறாத படகு ஓட்டுநர்களை அனுப்பி வைத்ததற்காக, படகின் கேப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இது எங்கள் நாட்டின் மிகப்பெரிய பேரழிவு ஆகும். இதற்காக நாடு முழுவதும் 4 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றார்.

இவ்விபத்து குறித்து போப் பிரான்சிஸ், ஐ.நா சபை பொதுச் செயலர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ஏராளமான ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக 1996ல் விக்டோரியா ஏரியில் எம்வி புகோபா சாங் கார்கோ பெர்ரி மூழ்கியதால் 800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து 2011ல் எம்வி ஸ்பைஸ் ஐலேண்டர் ஐ சாங் ஆப் விபத்தில் சிக்கியதில் 200 பேர் உயிரிழந்தனர்.

You'r reading தான்சானியாவின் பேரழிவு...பலி எண்ணிக்கை 209 ஆக அதிகரிப்பு. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை