புத்தாண்டை கொண்டாடும் விதமாக, இந்தோனேசியாவில் 450-க்கு மேற்பட்ட ஜோடியினர் நேற்று ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டனர்.
2017 ஆண்டு முடிந்து 2018-ஆம் ஆண்டு பிறந்தது. புத்தாண்டு பிறப்பு உலகம் முழுவதும் கோலாகலாமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்தோனேசியா நாட்டின் தலைநகர் ஜகார்த்தாவின் கான்பூரியா நகரில் நள்ளிரவு புத்தாண்டு விழாவையொட்டி நடைபெற்ற, மெகா திருமண நிகழ்ச்சியில் 450-க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவை இந்தோனேசியா அரசே ஏற்பாடு செய்திருந்தது.
நள்ளிரவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக, அங்கு அமைக்கப்பட்டிருந்த பெரிய அரங்கில் சுமார் 450 தம்பதிகள் தங்களுடைய குடும்பங்களுடன் பிரார்த்தனைக்கு அழைக்கப்பட்டார்கள்.
பின்னர், இதில் கலந்து கொண்ட ஜோடியினருக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டு, அதற்கான சான்றிதழ்களை அரசு அதிகாரிகளால் வழங்கப்பட்டன. விழாவில் கலந்துகொண்ட ஜோடிகள், அந்நாட்டின் பாரம்பரிய ஆடையை அணிந்து வந்திருந்தனர்.
இது குறித்து ஹார்டினிங்கிஸ் என்ற 38 வயது பெண்மணி கூறுகையில், “மறைக்க முடியாது ஒரு அனுபவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெருத்த மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.