எகிப்து நாட்டின் மின்யா என்ற மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எகிப்து நாட்டில் காப்டிக் என்ற பழமைவாய்ந்த கிறிஸ்தவர்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். எகிப்து நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மின்யா என்ற மாகாணத்தில் காப்டிக் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு திடீரென வந்த ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது.
இதில், சம்பவ இடத்திலேயே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.