உயிர்கொல்லி நோயான எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பு !

உயிர்கொல்லி நோயான எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேலை சேர்ந்த ஜியோன் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது.

மனிதனின் ரத்தத்தில் எச்ஐவி என்ற வைரசால் பரவும் எய்ட்ஸ் பாதிப்பு உயிரையே கொல்லும் அளவிற்கு மோசமானதாகும். ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் இந்த எச்ஐவி வைரஸ் ரத்தத்திற்குள் கலந்து இனப்பெருக்கம் செய்து உடல் முழுவதும் ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து ஆளையே அழித்து விடுகிறது.

பாதுகாப்பற்ற உடலுறவு, சுத்திகரிக்கப்படாத ஊசி பயன்படுத்துதல், ரத்த தானம், பேறு காலத்தில் தாயிடம் இருந்து குழந்தைக்கு போன்ற சூழ்நிலைகளில் எச்ஐவி வைரஸ் பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்ஐவி வைரஸ் முன்கூட்டியே ரத்த பரிசோதனையின் மூலம் தெரியவந்தால் தவிர, தாமதமாக கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில் உயிர் விடுவது உறுதியே என்ற நிலை தான் உலகம் முழுவதும் உள்ளது.

இந்நிலையில், எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் புதிய மருந்தை இஸ்ரேலை சேர்ந்த பயோடெக் நிறுவனமான ஜியோன் மெடிக்கல் நிறுவனம் கம்மோரா என்ற பெயரில் இந்த மருந்தை தயாரித்துள்ளது.

இந்த மருந்தின் மூலம் தொடர்ந்து நான்கு வாரம் சிகிச்சை எடுத்து வந்தால், எச்ஐவி மற்றும் எய்ட்சை 99 சதவீதம் அழித்துவிடலாம் என ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மருந்து முதன் முறையாக மனிதர்களிடம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. எச்ஐவி உயிரணுக்களை கொல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மருந்து மனித செல்களில் புகுந்து அதன் டிஎன்ஏவை உடைக்கிறது. இதனால், அந்த செல்கள் மீண்டும் வளர முடியாமல் வாழ்நாளை இழக்கிறது. கம்மோரா மருந்து எச்ஐவி நோய் தொற்று பரவுவதை 99 சதவீதம் தடுப்பதாக ஜியோன் ஆய்வு முடிவின் மூலம் தெரிவித்துள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
bil-and-melinda-gates-to-divorce-after-27-years-of-marriage
மனைவி யை விவகாரத்து செய்யும் பில்கேட்ஸ்…! பிரிவிற்கு என்ன காரணம் தெரியுமா…?
in-an-installment-vaccine-get-protection-from-deformed
ஒரு தவணை தடுப்பூசி உருமாறிய கொரோனாவை தடுக்குமா…? ஆய்வு முடிவு என்ன செல்கிறது…?
why-patients-must-get-their-heart-checked-post-recovery
கொரோனாவில் இருந்து மீண்ட பின் இதயத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என தெரியுமா? – மருத்துவ வள்ளூநர்கள் அதிர்ச்சி தகவல்…
today-is-international-firefighters-day-observance
மே 4 : என்ன தினம் என்று யாருக்காவது தெரியுமா...?
australians-to-face-jail-or-heavy-fine-if-they-go-home-from-india
சொந்த நாட்டிற்கு திரும்பினால் 5 ஆண்டுகள் சிறை ரூ.5 லட்சம் அபராதமா…? அதிர வைத்த பிரதமர்…!
an-81-year-old-man-living-alone-on-an-island-in-italy
32 ஆண்டுகள் தனியாக வாழ்ந்த தீவை விட்டு வெளியேறிய மனிதர்! என்ன காரணம்?
do-you-know-why-hitler-threatened-the-world-and-committed-suicide
உலகையே அச்சுறுத்திய ஹிட்லர் எதனால் தற்கொலை செய்தார் என்று தெரியுமா?
youngsters-can-affected-in-covid19-second-time
இளம் வயதினரே உஷார்! – இரண்டாம் முறையாக கூட கொரோனா தாக்கலாம்
indonesian-navy-releases-poignant-video-of-nowsunk
நீர்மூழ்கிக் கப்பலில் உயிரிழந்த வீரர்களின் கடைசி நிகழ்வு வீடியோ வெளியீடு
brit-awards-to-have-4000-strong-audience-and-no-social-distancing-as-part-of-uk-government-test
மாஸ்க் வேணாம் பாதுகாப்பான இடைவெளி தேவையில்லை – 4000 பேர் பங்கேற்கும் பிரமாண்ட இசை விழா!