சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கைவிடபட்ட சுரங்கம் ஒன்றை மூடாமல் மாறாக வித்யாசமான முயற்சியில் கையாண்டுள்ளது சீன அரசு. கடந்த 2013ம் ஆண்டு மூடப்பட்ட ஒரு சுரங்கத்தில் சொகுசு ஹோட்டல் ஒன்றை ஆடம்பரமாக கட்ட திட்டமிட்டு தற்போது அது துவங்கப்பட்டுள்ளது.
இன்டெர் கான்டினென்டல் ட்ரீம்-லேண்ட் என பெயரிடப்பட்ட அந்த ஆடம்பர ஹோட்டலில் மொத்தம் 17 தளங்கள் உள்ளன. 335 அறைகள் கொண்ட அந்த ஹோட்டலில் தங்க ஒரு இரவுக்கு இந்திய மதிப்பில் 30 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பூமியின் தரைப்பகுதியில் இருந்து பல அடி ஆழத்தில் சுமார் 30 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலுக்கு செல்வோர் அங்குள்ள நீர்சறுக்கு மற்றும் மலையேற்றம் போன்ற சாகச விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.