நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷை போலீசார் கைது செய்தனர்.
ஜப்பானைச் சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் நிசான். இந்நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஷ். இவர், நிதி முறைகேடு மற்றும் வருமானைத்தை குறைத்து காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, டோக்கியோ போலீசார் கார்லோஸ் கோஷிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதாகவும், இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக நிசான் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கார்லோஸ் கோஷ் மற்றும் பிரதிநிதித்துவ இயக்குனர் கிரேக் கெல்லியும் பல ஆண்டுகளாக நிதி முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.