ஜகார்த்தாவில் இருந்து ஜாவா தீவுக்கு சென்ற லயன் ஏர் விமானம் கடந்த மாதம் 29- ந் தேதி கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த போயிங் மேக்ஸ் 737 - ரக விமானத்தில் பயணித்த 188 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் விமானி பவ்யே சுனேஜாவும் ஒருவர். மீட்புப்படை கடலில் இறந்தவர்களின் சடலங்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில். சுனேஜாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தகவலை வெளியறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதி செய்துள்ளார். விரைவில் சுனோஜாவின் உடல் டெல்லியில் உள்ள அவரின் உறவினர்களிடத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் சுஷ்மா ட்விட் செய்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு லயன் ஏர் விமானத்தில் சுனேஜா பணிக்குச் சேர்ந்தார். 6 ஆயிரம் மணி நேரம் விமானங்களை இயக்கிய அனுபவத்தைப் பெற்றவர் இவர். சுனேஜாவுக்கு வயது 31.