அமெரிக்காவில் ஒருங்கிணைந்த தைப்பொங்கல் திருவிழா: தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்பு

TN Department of Archeology Udaya Chandran in Pongal festival in America

by Isaivaani, Jan 3, 2019, 11:03 AM IST

அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப்பொங்கல் திருவிழாவில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்க உள்ளார்.

அமெரிக்காவில், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைந்த மாபெரும் தைப் பொங்கல் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் கொண்டாடப்பட உள்ளது.

அமெரிக்காவில், தமிழ்நாடு அரசின் இயல், இசை மற்றும் நாடகம் மன்றம் சார்பில் முதல்முறையாக மாபெரும் தைப் பொங்கல் திருவிழா வரும் பிப்ரவரி மாதம் 2ம் தேதி நடைபெறுகிறது. கலைமாமணி விருதுகள் பெற்ற 15க்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் தமிழ் இலக்கியம், மொழி, கலை, பண்பாடு மற்றும் விருந்தோம்பல் போற்றும் வகையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அத்துடன், வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் மாபெரும் பொங்கல் திருவிழாவில் தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

அமெரிக்காவில் தமிழக அரசு சார்பில் முதன்முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில், பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாஷிங்டன் பகுதி மகளிர் வழங்கும் பருத்தி ஆடை அணிவகுப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி Walter Johnson High School, 6400 Rock Spring Dr, Bethesda, MD 20814 என்ற இடத்தில் நடைபெறுகிறது.

You'r reading அமெரிக்காவில் ஒருங்கிணைந்த தைப்பொங்கல் திருவிழா: தமிழக அரசின் தொல்லியல் துறை ஆணையாளர் உதயசந்திரன் பங்கேற்பு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை