May 22, 2019, 10:44 AM IST
தமிழகத்தில் மொத்தம் 45 மையங்களி்ல் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. 9 மணியளவில் யார் முந்துகிறார்கள் என்ற நிலவரம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 21, 2019, 20:12 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ஒப்புகைச் சீட்டைத்தான் முதலில் சரிபார்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இந்தக் கோரிக்கை குறித்து நாளை ஆலோசித்து முடிவெடுப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர் Read More
May 21, 2019, 19:08 PM IST
அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படும் என்பதில் தேர்தல் அதிகாரிகள் அடுத்தடுத்து எடுத்த முடிவுகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது Read More
May 21, 2019, 14:35 PM IST
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஏஜண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் Read More
May 20, 2019, 19:59 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது அதிக விழிப்புடனும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என கட்சியின் முகவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் Read More
May 20, 2019, 14:00 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு சாதகமாகவே வந்துள்ள நிலையில், மோசடி கணிப்புகளை புறந்தள்ளி வாக்கு எண்ணிக்கையில் கவனம் வைப்போம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தனது கட்சியினரை உஷார்படுத்தியுள்ளார் Read More
May 11, 2019, 13:10 PM IST
வாக்கு எண்ணிக்கையின் போது ரகளை செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தல் ஆணையம் முன் எச்சரிக்கை நடவடிக்கை வேண்டும் என்று அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் புகார் வாசித்துள்ளார் Read More
May 1, 2019, 14:07 PM IST
மதுரை நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறல் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் முறையீடு செய்தனர். கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம்.பாலாஜி இதுகுறித்து விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்டு,அவர் மதுரை வந்து விசாரணை நடத்தி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். அந்த அறிக்கையின் விபரங்கள் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளன. Read More
Apr 30, 2019, 19:42 PM IST
வெளிமாநில நீதிபதியை பார்வையாளராக நியமித்து மதுரை மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது Read More
Apr 27, 2019, 21:22 PM IST
மதுரை வாக்கு எண்ணிக்கை மையத் திற்குள் பெண் தாசில்தாரை அத்துமீற அனுமதி கொடுத்த மாவட்ட ஆட்சியரை உடனடியாக இடமாற்றம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறையினர் மீதும் நடவடிக்கை உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது Read More