May 24, 2019, 09:33 AM IST
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் சுற்று எண்ணிக்கையிலேயே 35 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிய வந்து விட்டது. ஆனால் முன்னுக்குப் பின் இழுபறியை ஏற்படுத்தியது தேனி, தருமபுரி, சிதம்பரம் ஆகிய 3 தொகுதிகள் தான். இதிலும் முதல் சில சுற்று இழுபறிக்குப் பின், தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி இறுதியில் வெற்றி அடைந்து விட்டார். Read More
May 20, 2019, 11:07 AM IST
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More
May 19, 2019, 08:36 AM IST
மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 59 தொகுதிகளில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம் உட்பட 4 சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவும் தொடங்கி நடைபெற்று வருகிறது. Read More
May 16, 2019, 10:50 AM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் இடைத்தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடையும் நிலையில், ஒரு பக்கம் தலைவர்கள் இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் மும்முரமாக இருக்க, ஓட்டுக்கு பணப்பட்டுவாடாவும் ஜரூராக நடந்து வருகிறது. பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகளால் கைகட்டி வேடிக்கை தான் பார்க்க முடிகிறது என்ற அளவுக்கு பிரதான கட்சிகள் அனைத்தும் இந்த விஷயத்தில் கூட்டணி அமைத்து பகிரங்கமாகவே பண வினியோகம் செய்து வருகின்றனர் Read More
May 13, 2019, 20:33 PM IST
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 50 சீட்களுக்கு கீழ் கிடைத்தால் ஆச்சர்யமான விஷயம் என்று சுப்பிரமணிய சாமி மொட்டையாக பதிவிட்ட ஒரு 'டுவீட்' அக் கட்சியினரை சிறிது நேரத்தில் பதறச் செய்து விட்டது. கடைசியில் உ.பி. மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 50 ஐத் தான் குறிப்பிட்டேன் என்று கூறி சமாளித்துள்ளார் சு.சாமி Read More
May 12, 2019, 12:08 PM IST
மக்களவைக்கு 6-வது கட்டமாக இன்று 59 தொகுதிகளில் நடைபெறுகிறது. கடந்த 2014 தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 44 தொகுதிகளைக் கைப்பற்றிய பாஜக கூட்டணிக்கு, இந்த முறை பாதி இடங்கள் கிடைப்பதே சந்தேகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
May 8, 2019, 14:19 PM IST
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளைக் கைப்பற்ற நட்சத்திர வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் இறக்கியுள்ளதால் , மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
May 3, 2019, 16:41 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில், இரவோடு இரவாக 'அமேதி எம்.பி. ராகுல் காந்தியை 15 வருடங்களாக காணவில்லை' என ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு, போஸ்டர்கள் முழுவதும் உடனடியாக அகற்றப்பட்டன Read More
May 2, 2019, 18:23 PM IST
மே 19-ந் தேதி நடைபெற உள்ள திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு கடந்த 22-ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கி 29-ந் தேதி முடிவடைந்தது. 4 தொகுதிகளிலும் மொத்தம் 256 பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இதில் 30-ந் தேதி நடந்த வேட்பு மனு பரிசீலனையில் 104 பேரின் மனுக்கள் தள்ளுபடியானது. இன்றும் 15 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற நிலையில், இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது Read More
Apr 29, 2019, 14:48 PM IST
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 தொகுதிகளில் நடைபெறும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும் அளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்துள்ளார் Read More