Aug 13, 2019, 12:40 PM IST
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ரூ.30 உயர்ந்து, பவுன் ரூ.28,896 என்ற விலைக்கு விற்கிறது. Read More
Aug 13, 2019, 11:58 AM IST
நெல்லை அருகே ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த பண்ணை வீட்டிற்குள் இரவு நேரத்தில் அரிவாள்களுடன் புகுந்த கொள்ளையர்களை வயதான தம்பதியினர், செருப்பு.. சேர்.. கட்டை.. என கையில் கிடைத்த பொருட்களை கொண்டே தைரியமாக அடித்து விரட்டிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீர, தீரத்துடன் போராடிய அந்தத் தம்பதிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. Read More
Aug 12, 2019, 13:22 PM IST
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் சம்பத், விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் 28ம் தேதி முதல் 13 நாட்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். Read More
Aug 11, 2019, 15:08 PM IST
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவு ரத்து செய்யும் தீர்மானம் நிறைவேற துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவும் முக்கியப் பங்கு வகித்தார் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். Read More
Aug 11, 2019, 12:40 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷா எப்படிப்பட்டவர் என்பது நாட்டுக்கே தெரிந்துவிட்டது என நடிகர் ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.பிரதமர் மோடியும், அமித் ஷாவும் கிருஷ்ணரும் அர்ஜூனனும் போன்றவர்கள் என்றும் சென்னையில் நடந்த விழாவில் ரஜினி, ஓகோவென புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More
Aug 11, 2019, 09:38 AM IST
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது.இந்த விழாவுக்காக சென்னைவந்துள்ள பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். Read More
Aug 10, 2019, 13:48 PM IST
வேலூரில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் இன்று காலை கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். Read More
Aug 7, 2019, 20:12 PM IST
தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவராகத் திகழ்ந்த கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி முரசொலி அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர்ர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். Read More
Aug 7, 2019, 14:14 PM IST
கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் சென்னையில் இன்று மாலை அவருடைய சிலை திறப்பு விழா மற்றும் நினைவு தின பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். Read More
Aug 7, 2019, 14:01 PM IST
சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு, இடைக்கால தடை விதிக்க மத்திய அரசு விடுத்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது. Read More