Apr 21, 2019, 12:56 PM IST
மதுரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குள் அதிகாரிகள் அத்துமீறி நுழைந்தது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திமுக நிர்வாகிகளும் - கூட்டணிக்கட்சி நிர்வாகிகளும் விழிப்போடு இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Apr 21, 2019, 10:58 AM IST
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 20, 2019, 00:00 AM IST
தருமபுரி, கடலூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய தொகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு. Read More
Apr 18, 2019, 08:51 AM IST
திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக வந்த அரசு அதிகாரிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார் Read More
Apr 13, 2019, 08:39 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் நான்கைந்து நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக களமிறங்கி அதிரடி சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால், எதிர்க்கட்சிகளை மட்டும் குறிவைத்து வருமான வரிச் சோதனைகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Apr 12, 2019, 20:45 PM IST
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர். Read More
Apr 12, 2019, 12:43 PM IST
அரசியல் கட்சிகள் தேர்தல் ஆதாயத்திற்காக இந்திய ராணுவத்தையும், வீரர்களின் தியாகத்தையும் பயன்படுத்துவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள் 156 பேர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியுள்ளனர் Read More
Apr 11, 2019, 13:21 PM IST
தேர்தல் பிரச்சாரத்தில் பாகிஸ்தானில் இந்திய விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது போன்றவற்றை குறிப்பிட்டுப் பேசியதில் தேர்தல் விதிமுறையை மீறியதற்கான ஆதாரங்கள் உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையருக்கு மகாராஷ்டிரா மாநில தலைமை தேர்தல் அதிகாரி அறிக்கை அனுப்பியுள்ளார். Read More
Apr 11, 2019, 08:28 AM IST
தேர்தல் கமிஷன் திடீரென நியாயஸ்தராக மாறியிருப்பதை கவனித்தீர்களா? பிரதமர் மோடி திரைப்படத்திற்கு தடை, தமிழகத்திற்கு தேர்தல் டிஜிபியாக அசுதோஷ் சுக்லா நியமனம் என்று அதிரடிகளை காட்டியிருக்கிறது அல்லவா? இதற்கு பின்னணி என்ன தெரியுமா? Read More
Apr 10, 2019, 07:30 AM IST
தேர்தலில் வாக்களித்ததற்கு அடையாளமாக வாக்காளர்களின் விரலில் அடையளாமாக வைக்கப்படும் அழியாத மை ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார் Read More