Apr 13, 2019, 08:25 AM IST
தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் முடியவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ளது. இந்த நிலையில், அ.தி.மு.க.--= பா.ஜ.க. கூட்டணிக்காக பிரதமர் நரேந்திர மோடியும், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் படையெடுத்து வந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். வழக்கமாக, நாடாளுமன்றத் தேர்தலின் போது தேசிய தலைவர்கள், நாடு முழுக்க உள்ள பிரச்னைகளைப் பற்றித்தான் பேசுவார்கள். ஆனால், இந்த முறை மோடியும், ராகுலும் உள்ளூர் பிரச்னைகளை மையமாக வைத்து பேசுகிறார்கள் Read More
Apr 13, 2019, 08:19 AM IST
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலும், 18 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது. மேலும், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கூட திடீர் திடீரென மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நிலையில், ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் மக்கள், ‘‘தேர்தலுக்கு மட்டும் வருகிறீர்களே, இத்தனை நாளா எங்க பிரச்னையை கேட்க யாராவது வந்தீர்களா?’’ என்று தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். Read More
Apr 12, 2019, 21:19 PM IST
தினசரி வேலை வேண்டும், பிரதமர் மோடி கிட்டப்போய் சொல்லுங்கள் என அங்கிலத்தில் பேசி அதிர வைத்திருக்கிறார் கூலி தொழிலாளி ஒருவர். Read More
Apr 12, 2019, 20:45 PM IST
திமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் திமுக பொருளாளருமான துரைமுருகன் காட்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர். தனது தொகுதி தொடர்பான அத்தனை தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் துரைமுருகன் காட்பாடி தொகுதியில் செல்லப்பிள்ளை போல இருந்து வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலின் தன் மகன் கதிர் ஆனந்திற்கு வாய்ப்புக் கேட்டு திமுக தலைமையிடம் விண்ணப்பித்த போது சிறிது தயக்கத்துடன் தான் திமுக கதிர் ஆனந்தை வேட்பாளர் ஆக்கியது. வேலூர், காட்பாடி பகுதி திமுகவினரே கதிர் ஆனந்திற்கு எதிராக இருந்தனர். Read More
Apr 12, 2019, 20:34 PM IST
குஜராத்தில் ஆளும் பாஜக எம்எல்ஏ வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யவும் அனுமதி மறுத்து, இடைத்தேர்தல் நடத்த உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 12, 2019, 20:30 PM IST
‘பரிசுப்பொட்டி கொடுத்து அரசின் கஜானாவை தட்டி எடுத்து சென்று விடுவார்’ என டிடிவி தினகரனை விமர்சித்து பேசினார் கமல். Read More
Apr 12, 2019, 20:22 PM IST
நாட்டிலேயே மிகவும் மோசமான ஒரு அமைப்பாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் உள்ளதாகவும், பாஜகவின் ஒரு அங்கமாக தேர்தல் ஆணையம் மாறி விட்டது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஓட்டு மெஷின்கள் மீது நம்பிக்கை இல்லை. மீண்டும் பழைய வாக்குச் சீட்டை முறையை கொண்டு வர வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் தர்ணா நடத்தப் போவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். Read More
Apr 12, 2019, 19:50 PM IST
அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசுகையில் மீண்டும் 'டங் ஸ்லிப்'பில் மாட்டிக் கொண்டார் ராமதாஸ். Read More
Apr 12, 2019, 18:39 PM IST
வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க என இளைஞயர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். Read More
Apr 12, 2019, 13:50 PM IST
பண்டிகையை காரணம் காட்டி தமிழகத்தில் தேர்தலை தள்ளி வைக்கக்கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. Read More