‘டிவி’ ரிமோட்டை ஆவேசமாக வீசிய கமல்...பிரசார வீடியோவில் மிரட்டல்! #viralvedio

‘வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க’ என இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

தேர்தலில், மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாதத்தில் ஈடுபட்டு வருகிறார் கமல். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் கமல், சமூக வலைதளங்களில் பிரசார வீடியோவை வெளியிட்டு மும்மரமாக  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, தன் ட்விட்டர் பக்கத்தில் ‘நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மிரள வைத்திருக்கிறார் கமல். விடியோவின் தொடக்கத்தில், ‘கலைஞரின் மகனாக இருக்கக் கூடிய நான்....(ஸ்டாலின் பேச்சு), ஹிந்தியில் உரையாடும் மோடியின் உரை, தர்மம் தன் வாழ்வு தன்னை சூது கவ்வும்...(ஓபிஎஸ் வாய்ஸ்), யு.ஆர்.ஏ ஆன்டி இந்தியன் என பேசும் ஹெச்.ராஜா ஆகியோரின் குரலைக் கேட்டு, கோபம் கொள்ளும் கமல், திடீரென டிவி ரிமோட்டை ஆவேசமாக வீசி எறிகிறார்.

பின் ஆக்ரோஷ முகத்துடன்... முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?

நீ என்னடா சொல்றது...எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. கரெக்ட்.., அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்...

மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத தலைமை இருக்கிற இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும் தான். வணக்கம். என முடித்திருக்கிறார் கமல்.

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!

புது வெளிச்சம் பிறக்கட்டும்!

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான். pic.twitter.com/MUdNCjSsgb

— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2019 " />

நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும்!

புது வெளிச்சம் பிறக்கட்டும்!

வாக்களிப்பீர் #டார்ச்லைட் சின்னத்திற்கு.

உங்கள் நான். pic.twitter.com/MUdNCjSsgb

— Kamal Haasan (@ikamalhaasan) April 12, 2019 " />

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

Many-Lakhs-of-currency-seized-in-the-raid-by-vigilance-officials-in-most-of-the-sub-registrar-offices-in-TN
தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டை... லட்சக்கணக்கில் சிக்கிய பணம்
From-school-dropout-to-crusader-of-free-education
தாய் கையால் சாப்பிடாத தலைவர் (ஜூலை 15 - காமராஜர் பிறந்தநாள்)
Top-HR-amp-CE-official-held-for-filming-women
பெண் அதிகாரியை படம் பிடித்த இணை கமிஷனர் சஸ்பெண்ட்; அறநிலையத்துறை அசிங்கம்
Why-Water-Trains-To-Chennai-May-Not-Quench-Parched-Citys-Thirst
ரயில் தண்ணீர் போதவில்லை; சென்னையில் ஒரு லாரி தண்ணீர் 5000 ரூபாய்
high-court-dismissed-tamilnadu-government-s-pettion-challenging-green-tribunals-order-imposing-rs100crore-fine
ரூ.100 கோடி அபராதத்தை எதிர்த்த தமிழக அரசு மனு தள்ளுபடி; உயர்நீதிமன்றம் அதிரடி
President-Ramnath-Govind-arrives-today-to-kancheepuram-to-dharshan-athivaradhar
அத்திவரதரை தரிசிக்க ஜனாதிபதி வருகை ; 1 to 5 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
Drinking-water-for-Chennai-from-jolarpet-first-train-departed
ஜோலார்பேட்டை வாட்டர் எக்ஸ்பிரஸ் கிளம்பியாச்சு'- சென்னைவாசிகளின் தாகம் தீருமா?
Social-activist-Madurai-advocate-Nandhini-freed-from-jail-and-married-his-friend-today
சிறையிலிருந்து விடுதலையான வழக்கறிஞர் நந்தினிக்கு கல்யாணம்
48--revenue-of-tamilnadu-government-comes-from-tax-on-liquor-and-petrol
மதுவும், பெட்ரோலும் தான் 48% வருவாய் தருகிறது: தமிழக அரசு தகவல்
SC-rejects-Saravana-Bhavan-founder-Rajagopals-plea-for-more-time-to-start-serving-life-term-murder-case
சரவணபவன் ராஜகோபால் உடனே சரணடைய உத்தரவு; சுப்ரீம் கோர்ட் அதிரடி

Tag Clouds