சீரியல் சீக்ரெட்ஸ் 1 - எல்லா சீரியலிலும் ஒரே ஃபார்முலா தான்… அது என்ன தெரியுமா

Serial secrets series for serial lovers

by Sakthi, Apr 12, 2019, 18:05 PM IST

இது சீரியல் யுகம். சினிமா ஹீரோயின்களை விடவும் சீரியல் ஹீரோயின்களுக்கு மவிஸு அதிகம். ஏனென்றால் சீரியல் நாயகிகள் நேரடியாக வீடுகளுக்குள் வாசம் செய்கின்றனர். ராதிகா தொடங்கி காயத்ரி ஜெயராம் வரை பெரிய திரையிலிருந்து சின்னத் திரைக்குள் நுழைந்துவிட்டனர். இனி சின்னத் திரைதான் நம்ம திரை. எனவே இனி தினமும் சின்னத் திரைக்குள் நடக்கும் A டு Z விஷயங்களை ஒவ்வொன்றாக உங்களுக்குச் சொல்ல போகிறேன். இது சீரியல் பிரியர்களுக்கான ஜாலி தொடராக இருக்கும்.

சீரியல் சீக்ரெட்ஸ்

விஜய், ஜீ, கலர்ஸ் அனைத்துக்கும் முன்னோடி சன் டிவி தான். ராதிகாவின் சித்தி சன் டிவியில் ஒலிப்பரப்பான பிறகுதான் மக்கள் மத்தியில் சீரியல் பார்க்கும் பழக்கம் அதிகரித்தது. எனவே, தமிழ் சீரியல் வரலாற்றில் ராதிகா தவிர்க்க முடியாத ஆளுமை. அதன் பின்னர் ராஜ், விஜய், பாலிமர் என அனைத்து சேனல்களும் சன் டிவிக்கு போட்டியாக ஹிந்தி சீரியல்களை டப் செய்து களமிறக்கின. ஓரளவுக்கு நல்ல ரீச் இருந்தது. இப்போது ட்ரெண்ட் கொஞ்சம் மாறிவிட்டது. முன்பெல்லாம் சீரியல்களில் தமிழ் பெண்கள் நிறைந்திருப்பார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. சினிமாவில் தான் வேற்று மொழி வாசம் வீசுகிறதென்று பார்த்தால், இப்போதெல்லாம் சீரியல்களிலும் வேற்று மொழி ஹீரோயின்களை களமிறக்க தொடங்கிவிட்டனர். தமிழ் பெண்களின் டஸ்கி நிறத்தின் மதிப்பை இவர்கள் உணரவில்லையோ என்னவோ. சரி அது வேறு டிபார்ட்மெண்ட். விஷயத்துக்கு வருவோம்.

சீரியல் சீக்ரெட்ஸ்

சமீப காலமாகவே சீரியல்களில் ஒரு ட்ரெண்ட் பின்பற்று வருகிறது. அதாவது, சீரியலில் ஹீரோ ஹீரோயின் ஏதோ ஒரு சூழலில் திருமணம் செய்து கொள்வார்கள். அல்லது திருமணம் வலுக்கட்டாயமாக நடத்தி வைக்கப்படும். அதன் பின்னர் அவர்களுக்குள் ஏற்படும் மோதல், புரிதல், நட்பு இவற்றை மசாலா தூவி மக்களுக்குப் பரிமாறுகிறார்கள் இன்றைய சீரியல் இயக்குநர்கள். சிம்பிளாகச் சொல்ல வேண்டும் என்றால், மோகன், ரேவதி நடித்த மெளன ராகம் படத்தின் ஃபார்முலா தான் இன்றைய ட்ரெண்ட். 'ராஜா ராணி’ பட ஃபார்முலா என்று கூட வைத்துக் கொள்ளலாம்.

சீரியல் சீக்ரெட்ஸ்

ஈரமான ரோஜாவே, ராஜா ராணி, பூவே பூச்சூடவா, சத்யா, திருமணம், தெய்வ மகள், பாண்டியன் ஸ்டோர்ஸ் என அத்தனை ஹிட் சீரியல்களிலும் ஒரே கான்சப்ட் தான். கூடவே கொஞ்சம் மாமியார், நாத்தனார் சண்டைகள் என மசாலா சேர்த்து விடுகின்றனர். மக்களும் இந்த ஃபார்முலாவை தான் விரும்புகிறார்களோ என்னவோ.

செட்டே ஆகாது என்று இருக்கும் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தால் என்னவாகும். தினம் தினம் யுத்தம் தான். ஒருக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிக்கிறார்கள். அதன் பின்னர் மோதல் நட்பாக மாறி உறவு அடுத்தடுத்த பரிமானத்துக்கு செல்கிறது. இந்த ட்ரெண்ட் ரசிக்கும்படி இருந்தாலும் ஒரு சின்ன நெருடல்தான். இன்றைய கால்கட்டத்தில் சாதி மதம் கடந்த காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. சமூகம் முன்னோக்கி செல்கிறது. இந்தச் சூழலில் நிச்சயக்கப்பட்ட திருமணங்களின் அழகியலை மட்டுமே காட்டுவது சமூகத்தைப் பின்னோக்கி நகர்த்தும். ''இவ்வளவு ஆழமாகச் சிந்திக்க வேண்டியதில்லை. நான் சீரியலை பொழுதுப்போக்குக்காகத் தான் பார்கிறேன். என்னிடத்தில் எந்தத் தாக்கத்தையும் அது ஏற்படுத்தாது’’ என்பவருக்கு இந்த நெருடல் இருக்காது.

சீரியல்களின் மற்றொரு ஆபத்தான ட்ரெண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. அதை நாளைப் பார்ப்போம்.

You'r reading சீரியல் சீக்ரெட்ஸ் 1 - எல்லா சீரியலிலும் ஒரே ஃபார்முலா தான்… அது என்ன தெரியுமா Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை