காதலுக்கு நோ சொன்ன இளம்பெண் கழுத்து நெரித்து கொலை சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

Advertisement

காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை அவரது உறவினரே கழுத்தைத் நெரித்து கொன்ற சம்பவம் தாம்பரம் பகுதி மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.

சென்னை பல்லாவரத்தில் உள்ள ஒரு தனியார் லேபில் டெக்னீஷினியனாக வேலை செய்து வந்த அகிலா என்ற இளம் பெண்ணை அவரது அக்காள் கணவரின் தம்பி சந்தோஷ் கழுத்தை நெரித்துக் கொன்றுள்ளார்.

தஞ்சை பட்டுவிடுதி கிராமத்தை சேர்தன் அகிலா, வேலை நிமித்தமாக சென்னையில் தங்கி பணிபுரிந்து வந்தார். அகிலாவிற்கும் அவரது அக்காள் கணவரின் தம்பி சந்தோஷிற்கும் உறவினர் என்ற முறையில் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தது.

இந்நிலையில், தாம்பரம் அடுத்து சிட்லபாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு சந்தோஷ், அகிலாவிடம் பேச வேண்டும் என அழைத்துள்ளார். மறுநாள் காலையில், மர்மமான முறையில் அகிலா இறந்து கிடந்ததாக, சந்தோஷே காரில் அவரை ஏற்றிக் கொண்டு ஒன்றும் தெரியாதவர் போல மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அகிலாவின் மரணம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என சந்தோஷ் உறவினர்களிடம் சாதித்தார். ஆனால், அவர்மீது சந்தேகம் எழவே போலீசாரில் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசாரிடமும் முதலில் சந்தோஷ் அவ்வாறே சாதித்து வந்தார். பின்னர், போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டில், அகிலா கழுத்து நெரித்து கொல்லப்பட்டது தெரிய வர, விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தன்னை காதலிக்காமல், வேறு ஒருவரை அகிலா காதலிக்கும் செய்தி அறிந்து, ஆத்திரத்தில் தான் அவரை கழுத்தை நெரித்துக் கொன்றேன் என சந்தோஷ் ஒப்புக் கொண்டார்.

கைது செய்யப்பட்ட சந்தோஷிற்கு உச்சபட்ச தண்டனை வழங்கவேண்டும் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
/body>