விதிகளை மீறி ஜெய்ப்பூரில் கர்ஜித்த தோனி உலகளவில் ட்ரெண்டான வீடியோ!

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த ஐபிஎல் போட்டி உலக வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.

பல புதிய சாதனைகளை படைத்து வரும் தோனி, இந்த சாதனையையும் படைத்து விட்டார். 20 ஓவர்களில் 151 ரன்களுக்கு சுருண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பலமாக பந்துவீசியது.

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்சன் ரன் ஏதும் எடுக்காமலும், டூப்ளஸ்சி 7 ரன்களுக்கும் ரெய்னா 4 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.

சென்னை அணி தோல்வியின் விளிம்பில் இருந்த போது, அம்பத்தி ராயுடு நிதனாமாக ஆடி 57 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானர். அவருடன் கைகோர்த்த கேதார் ஜாதவ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் தோனி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் அடித்த தோனி 43 பந்துகளில் 58 ரன்கள் அடித்த நிலையில், கடைசி ஓவரின் 3 பந்தில் போல்ட் ஆகி விக்கெட் ஆனார்.

அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் முனைப்பில் போராடிய தோனி அவுட் ஆனதும் சென்னை ரசிகர்கள் அப்செட் ஆகினர்.

பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னர் மற்றும் ஜடேஜா அவுட் ஆகாமல் தலா 1 சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றியடைய செய்தனர்.

ஆனால், அதுவும் அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. 19.4வது பந்தில் சென்னை அணி 146 ரன்கள் எடுத்திருந்த போது பென் ஸ்டோக்ஸ் வீசிய பந்து நோ பால் என முதலில் கூறிவிட்டு, பின்னர் அம்பயர்கள் மாற்றி கூறியதால் சர்ச்சை எழுந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவுட் ஆகி வெளியே சென்ற தோனி, மீண்டும் பெவிலியனுக்குள் பிரவேசித்து, அம்பயர்களிடம் காரசார விவாதம் நடத்தினார். அப்போது நோபால் வீசிய ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் குறுக்கிட, நான் உங்கிட்ட பேசல, அம்பயர் கிட்ட பேசுறேன் எனக் கூறி கேப்டனாக தனது அணிக்கான நீதியை போராடி வென்றார் தோனி. இறுதி பந்தில் மிட்செல் சாண்ட்னர் அடிச்ச சிக்ஸர் கேப்டனாக தோனிக்கு 100வது வெற்றியை ஈட்டித் தந்தது.

ஆனால், ஐபிஎல் விதிகளை தோனி மீறியதால், அவருடைய ஒரு நாள் சம்பளத்தில் 50 சதவிகித தொகை அபராதமாக விதிக்கப்பட்டது.

ஆனாலும், உலகம் முழுக்க உள்ள தோனி ரசிகர்கள் கேப்டன் என்றால் தோனி தான் என அந்த வீடியோவை ட்விட்டர், டிக்டாக், ஃபேஸ்புக், யூடியூப் என அனைத்து சமுக வலைதளங்களிலும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

உலகளவில் தோனி அம்பயர்களிடம் கர்ஜித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement
மேலும் செய்திகள்
ipl-suspended-due-to-corona-crisis
வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு எதிரொலி - ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைப்பு!
maradona-was-in-agony-for-the-12-hours-leading-up-to-his-death
புகழ்பெற்ற கால்பந்து வீரர் மரடோனா மரணத்தில் மர்மம் – அதிர்ச்சி தகவல்!
sri-lanka-wins-last-test-against-bangladesh-captured
வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தொடரை கைப்பற்றிய இலங்கை
ipl-cricket-will-hyderabad-beat-mumbai
மும்பை இந்தியன்ஸ் அணியை சுட்டெரிக்குமா ஐதராபாத் சன்ரைசர்ஸ்…?
warner-may-not-get-a-chance-in-playing-11-also-in-the-coming-matches
கேப்டன் பதவி பறிப்பை அடுத்து வீட்டுக்கு அனுப்ப பிளான்! டேவிட் வார்னருக்கு செக்!
suryakumar-yadav-shares-an-adorable-kiss-with-his-wife
கேமிரா இருப்பதை மறந்து தேவிஷா ஷெட்டிக்கு மும்பை அணி வீரர் முத்தம்...! இணையத்தில் வைரல்
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
post-a-hilarious-summary-of-their-win-over-rcb-using-chris-gayle-yuzvendra-chahal-s-reference
யாரு பலசாலி?- கிறிஸ்கெய்லுக்கு டஃப் கொடுத்த சஹால்.. வைரல் போட்டோ!
ravichandran-ashwin-s-wife-prithi-shares-family-s-ordeal-with-covid-19-urges-to-take-vaccine
``அது கஷ்டமாக இருந்தது'' - அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!
ipl-cricket-chennai-super-kings-won-by-7-wickets
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி
/body>