தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பது வெகுவாக குறைந்துள்ளது. சென்னையில் புதிதாக 180 பேருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் பல நாடுகளுக்குப் பரவியது. இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது.
தமிழகத்தில் பெரம்பலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிக்கப்படவில்லை. சீனாவில் இருந்து பல நாடுகளுக்கு பரவிய கொரோனா தொற்று இந்தியாவிலும் ஒரு கோடியே 5 லட்சம் பேருக்கு பரவியிருக்கிறது.
சென்னை-சேலம் இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 வழிச் சாலை(பசுமை வழிச்சாலை) அமைக்கும் திட்டத்துக்காகக் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,900 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
ஆண்டுதோறும் ஜனவரி பொங்கல் திருநாளில் நடக்கும் சென்னை புத்தக காட்சி இந்த ஆண்டு நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தைப் பொங்கலை ஒட்டி சென்னையில் மாபெரும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இந்த புத்தகக் கண்காட்சியில் எல்லா துறை சார்ந்த புத்தகங்களும் இடம்.
சென்னை, கோவை மாவட்டங்களில் மட்டுமே கொரோனா தொற்று பரவல் நீடித்து வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு பாதித்திருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே மூன்று லட்சம் பேருக்கு பாதித்திருக்கிறது.
தமிழகத்தில் இது வரை 8 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டதில் 8 லட்சம் பேர் அந்நோயில் இருந்து மீண்டுள்ளனர். 12,156 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48,153 பேர் உயிரிழந்துள்ளனர்
இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு வந்த 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது புதிய வகை கொரோனா தொற்றா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 32 மாவட்ட நீதிபதி பணியிடங்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்வதற்காகக் கடந்த நவம்பர் 1ம் தேதி தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு எழுதக் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் வழக்கறிஞர்களாக பணிபுரிந்திருக்க வேண்டும்.