இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் உதவியுடன் பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்துள்ள கோவாக்சின் என்ற தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக இந்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தை தற்போது சென்னை செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் (ஐ.வி.சி) நிறுவி, கோவாக்சின் தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பேசியுள்ள மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் ``செங்கல்பட்டு ஆலையில் கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களை நாங்கள் தேடி வருகிறோம். இதற்காக விண்ணப்பித்த டென்டர் விண்ணப்பதாரர்களில் பாரத் பயோடெக் ஒரு நிறுவனமாக இருக்கிறது. அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தற்போது பாரத் பயோடெக் நிறுவனம் மட்டுமே இதுவரை தயாராக கொரோனா தடுப்பூசி வைத்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார்.