டிவி ரிமோட்டை ஆவேசமாக வீசிய கமல்...பிரசார வீடியோவில் மிரட்டல்! #viralvedio

Advertisement

வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க என இளைஞர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

தேர்தலில், மாற்றம் வேண்டும் என்ற முழக்கத்துடன் தீவிர பிரசாதத்தில் ஈடுபட்டு வருகிறார் கமல். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் கமல், சமூக வலைதளங்களில் பிரசார வீடியோவை வெளியிட்டு மும்மரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

அதன்படி, தன் ட்விட்டர் பக்கத்தில் நம் விழியில் எரியும் கோபம், நம் விரல்களில் வெடிக்கட்டும் என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மிரள வைத்திருக்கிறார் கமல். விடியோவின் தொடக்கத்தில், கலைஞரின் மகனாக இருக்கக் கூடிய நான்....(ஸ்டாலின் பேச்சு), ஹிந்தியில் உரையாடும் மோடியின் உரை, தர்மம் தன் வாழ்வு தன்னை சூது கவ்வும்...(ஓபிஎஸ் வாய்ஸ்), யு.ஆர்.ஏ ஆன்டி இந்தியன் என பேசும் ஹெச்.ராஜா ஆகியோரின் குரலைக் கேட்டு, கோபம் கொள்ளும் கமல், திடீரென டிவி ரிமோட்டை ஆவேசமாக வீசி எறிகிறார்.

பின் ஆக்ரோஷ முகத்துடன்... முடிவு பண்ணிட்டீங்களா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? குடும்ப அரசியல் என்ற பெயரில் நாட்டையே குழிதோண்டி புதைச்சாங்களே அவங்களுக்கா? இல்ல நம்ப உரிமைக்காக போராடும்போது நம்பள அடிச்சி துறத்தினார்களே அவங்களுக்கா? நலத்திட்டம் என்ற பெயரில் நிலத்தையே நாசம் செய்து விவசாயிகளை அம்மனமாக்கி நாட்டை தலைகுணிய வைத்தார்களே அவங்களுக்கா? இல்ல கார்ப்பரேட் கைக்கூலியாக மாறி பணத்திற்காக நம்ப மக்களையே சுட்டுக் கொலை செய்தார்களே அவர்களுக்கா? யாருக்கு ஓட்டு போடப் போறீங்க?

நீ என்னடா சொல்றது...எங்களுக்கு தெரியும். எங்க அப்பா, அம்மா யாருக்கு ஓட்டு போட சொல்றாங்களோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம் அப்படின்னு நீங்க சொல்றது கேட்கிறது. கரெக்ட்.., அம்மா அப்பா சொல்றபடி கேட்கணும். ஆனால் எந்த அம்மா அப்பா சொல்றத கேட்கணும்னு நான் சொல்றேன்...

மொத்த அரசாங்கமும் சேர்ந்து நீட் தேர்வு என்ற பெயரில் ஒரு பொண்ண கொலை செய்தார்களே அந்தப் பெண்னோட அப்பா அம்மாகிட்ட கேளுங்க. அவங்க சொல்வாங்க யாருக்கு போகக்கூடாது என்று. நாட்டை ஆள தகுதியே இல்லாத தலைமை இருக்கிற இந்த நாட்டில் அதை தட்டி கேட்கிற ஒருத்தனா உங்களில் ஒருத்தனா கேட்கிறேன். யாருக்கு ஓட்டு போடப் போறீங்க. வரும் ஏப்ரல் 18 குனிந்து கும்பிடாதீர்கள். நிமிர்ந்து ஓட்டு போடுங்க. நீங்கள் வெற்றி களம் காணும் நாள். நாங்களும் தான். வணக்கம். என முடித்திருக்கிறார் கமல்.

Advertisement
மேலும் செய்திகள்
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
/body>