Mar 25, 2019, 22:23 PM IST
தேர்தல் ஆணையம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒருதலைப் பட்சமாகவும், பாரபட்சமாகவும் செயல்பட்டு, தமிழகத்தில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாக தேர்தல் ஆணையம் மாறிவிட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். Read More
Mar 25, 2019, 06:00 AM IST
மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் இறுதிக் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. அக்கட்சியின், துணைத்தலைவர் மகேந்திரன் தலைமையில், மாபெரும் மாநாடு கோவை கொடிசியா மைதானத்தில் நடந்தது. வேட்பாளர்கள் பட்டியலுடன், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. Read More
Mar 25, 2019, 05:10 AM IST
நாட்டில் வறுமையை ஒழிக்க, ஏழ்மை நிலையில் இருக்கும் 20 சதவீதம் ஏழைக் குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். Read More
Mar 25, 2019, 04:45 AM IST
திண்டுக்கல் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான், குப்பை வண்டி ஒட்டியும், வீதிகளைத் தூய்மை செய்தும் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார். Read More
Mar 25, 2019, 15:07 PM IST
தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளை ஏப்ரல் 9-ந் தேதி மாலை முதல் மே மாதம் 19-ந் தேதி மாலை வரை வெளியிடக்கூடாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 02:00 AM IST
தமிழகத்தில், தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் களமும் விறுவிறுப்பாக நகர்கிறது. அதிமுக, திமுக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். Read More
Mar 25, 2019, 13:29 PM IST
குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார். Read More
Mar 25, 2019, 12:56 PM IST
பொதுப்பட்டியலில் உள்ள குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. வேறு சின்னம் ஒதுக்குவது தொடர்பான உத்தரவை இன்றே பிறப்பிக்குமாறு தினகரன் தரப்பில் முறையிடப்பட்டதற்கும் தேர்தல் ஆணையம் உரிய பதிலளிக்காததால் விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. Read More
Mar 25, 2019, 11:59 AM IST
திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவாக்குறிச்சி தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக் கோரி திமுக தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.வரும் 28-ந் தேதி விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. Read More
Mar 25, 2019, 11:00 AM IST
தமிழக தேர்தல் களம் பரபரப்பை எட்டியுள்ளது. தேர்தலில், போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். Read More