விஜய், அஜீத் பட நடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரி சோதனை... ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது...

விஜய்யுடன் லவ் டுடே, அஜித்துடன் ராஜா மற்றும் பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம், ஆளுக்கொரு ஆசை உள்ளிட் பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் மந்திரா. இவர் கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர். Read More


கர்நாடக காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.4 கோடி சிக்கியது.. 2வது நாளாக ஐ.டி. ரெய்டு..

கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வரா வீடு மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் 2வது நாளாக வருமான வரிச் சோதனை நடைபெற்றது. இதில்,ரூ.4.52 கோடி கைப்பற்றப்பட்டது. Read More


அந்த நம்பரில் இருந்து அழைப்பு வந்தது..! கனிமொழி வீட்டு ரெய்டுக்கு காரணம் இதுவே...

திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு குறித்து விளக்கம் அளித்துள்ளார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. Read More


கோடிகளை பதுக்கும் ஆளா நான்..? கோட்டும் வொய்ட்டு; நோட்டும் வொய்ட்டு –தமிழிசை விளாசல்

வருமான வரித்துறையினரின் அதிரடி சோதனை நடவடிக்கையால் தமிழக அரசியல் களம் பரபரப்பாக உள்ளது. இதனிடையில்  பாஜக மாநில தலைவரும், தூத்துக்குடி பாஜக வேட்பாளருமான தமிழிசை சவுந்தரராஜன், ‘தூத்துக்குடியில் பணம் ஆறாக கரைபுரண்டு ஓடுகிறது’ எனத் தெரிவித்துள்ளார். Read More


ஆண்டிபட்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் ரத்தாகிறதா? - தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை

ஆண்டிபட்டியில் அமமுகவினரிடம் ரூ 1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொகுதியிலும் இடைத் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. வருமான வரித்துறையிடம் அவசர, அவசரமாக அறிக்கை பெற்றுள்ள தேர்தல் ஆணையம் , தேர்தலை ரத்து செய்வது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன Read More


ஆண்டிபட்டியில் அமமுகவினரை அலறவிட்ட அதிகாரிகள் - ரூ.1.5 கோடி பறிமுதல்; போலீஸ் துப்பாக்கி சூடு - 150 பேர் மீது கொலை முயற்சி வழக்கு

ஆண்டிபட்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினரை குறிவைத்து வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.1.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. Read More


எம்.எல்.ஏ விடுதி..! அமைச்சரின் அறை...! நள்ளிரவு சோதனை...! பிடிபட்டது என்ன? ரகசியம் காக்கும் அதிகாரிகள்

சென்னையில் எம்.எல்.ஏ க்கள் தங்கும் விடுதியில் நள்ளிரவில் வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் அறையை குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் என்ன பிடிபட்டது என்பது பற்றிய தகவல் வெளியிடப்படாமல் ரகசியம் காக்கப்படுவதால் பெரும் சந்தேகம் எழுந்து சர்ச்சை நீடிக்கிறது Read More


2016 தேர்தலில் ரூ.650 கோடி பிடிபட்டதற்கு நடவடிக்கை எங்கே? மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

2016 சட்டமன்றத் தேர்தலின்போது 650 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் அதிமுக வேட்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்தும் வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


வேலூர் தொகுதி திக்.. திக்..! தேர்தல் நடக்குமா ? ரத்தாகுமா? - இன்று முடிவெடுக்கிறது தேர்தல் ஆணையம்

வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? ரத்தாகுமா? என்ற திக்.. திக்.. பதற்றத்திலேயே நாட்கள் கடந்து போகும் நிலையில் இன்று உறுதியான முடிவு தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது Read More


துரைமுருகன் ஆட்களிடம் பிடிபட்டது எத்தனை கோடி? - தேர்தல் அதிகாரி விளக்கம்

வேலூர் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் ரூ 10.57 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு இன்று தான் வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More