விஜய், அஜீத் பட நடிகை மந்த்ரா வீட்டில் வருமான வரி சோதனை... ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது...

by Chandru, Nov 1, 2019, 20:13 PM IST

விஜய்யுடன் 'லவ் டுடே', அஜித்துடன் 'ராஜா' மற்றும் பிரியம், கல்யாண கலாட்டா, சிம்மாசனம், ஆளுக்கொரு ஆசை உள்ளிட் பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் மந்திரா. இவர் கலர்ஸ் நிறுவன உரிமையாளரின் உறவினர்.

கலர்ஸ் நிறுவனங்களின் கிளைகளில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள நடிகை மந்திரா வீட்டிலும் வருமான வரி சோதனை நடப்பதாக தகவல்கள் வந்துள்ளது. நடிகை மந்திரா வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் என்னென்ன என்பது குறித்து இதுவரை தகவல் வெளிவரவில்லை. ஆனாலும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

கோலிவுட் நடிகை ஒருவரின் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a reply