கங்கனா ரனாவத் நடிக்கும் ஜெயலலிதா வாழ்க்கை படத்திற்கு தடை கேட்டு வழக்கு... அண்ணன் மகள் ஜெ.தீபா தொடர்ந்தார்.

by Chandru, Nov 1, 2019, 20:29 PM IST
Share Tweet Whatsapp

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று கதையாக தலைவி  திரைப்படம் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இதில் ஜெயலலிதா வேடத்தை கங்கனா ரனாவத் ஏற்று நடிக்கிறார். இப்படம் இந்தியிலும் உருவாகிறது.

அதேபோல் குயின் என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக கவுதம் மேனன் இயக்கிவருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகும் தலைவி படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா மனுதாக்கல் செய்யதுள்ளார்.

தனது அனுமதியின்றி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்ககூடாது. மேலும், ஜெயலலிதாவின் கண்ணியம் பாதிக்கப்படாமல் படம் எடுக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


Leave a reply