அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் சங்கி விஜய் பட பாணியில் ஆக்‌ஷன் படமாக உருவாகிறது..

by Chandru, Nov 1, 2019, 20:50 PM IST

விஜய் நடித்த பிகில் படத்தை அடுத்து இயக்குநர் அட்லி இயக்கும் படம் பற்றி வெவ்வேறு தகவல்கள் வருகின்றன. இந்தி நடிகர் ஷாருக்கான் அல்லது  ஜூனியர் என்டிஆர் படம் இயக்க உள்ளதாகவும் பேச்சு உள்ளது. தற்போது அவர் ஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக உறுதியான தகவல் வந்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி நடந்தபோது சென்னை வந்த ஷாருக்கானை, கிரிக்கெட் மைதானத்தில் அட்லி சந்தித்து பேசினார். பின்னர் அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் சந்தித்து பேசினார். அப்போதே இருவரும் இணைந்து படம் உருவாக்கவிருப்பதாக தகவல் வெளியானது. தற்போது இவர்கள் இணைவது உறுதியாகி இருக்கிறது.

விஜய்யை வைத்து அதிரடி ஆக்ஷன் படங்களை வழங்கியதுபோல் ஷாருக்கானுக்கும் ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படத்தை உருவாக்க விருக்கிறார் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த  ஓரிரு நாளில் தகவல் வெளியாகும் என தெரிகிறது. தமிழ், இந்தி மொழிகளில் தயாராக உள்ள இப்படத்திற்கு, 'சங்கி' என டைட்டில் வைக்கப்படவிருக்கிறதாம்.
இது விஜய் நடித்த மெர்சல் ரீமேக் என்று கூறப்படுகிறது.


Leave a reply