நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் போன்ற தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் பூனம் கவுர்.
கைவசம் படங்கள் இல்லாமலிருக்கும் இவர் இணைய தளம் மூலம் சர்ச்சை கருத்துக்கள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக சில நடிகர்களை குறி வைத்து விமர்சிக்கிறார்.
சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஒருவரைப் பற்றி கடுமையாக தாக்கி பேசிய அவர் 'ஒரு பொய்யன் அரசியல் வாதியாகலாம் ஒருபோதும் தலைவன் ஆக முடியாது' என குறிப்பிட்டிருந்தார்.
நடிகராக இருந்து அரசியலுக்கு வந்த தெலுங்கு நடிகர் பவன் கல்யா ணைத்தான் அவர் மறைமுகமாக தாக்குகிறார் என பலரும் தெரிவித்தனர். அதற்கு பூனம், மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.
நடிகரின் பெயரை குறிப்பிடாமல் பூனம் கூறிய குற்றச்சாட்டை சர்ச்சையில் இழுத்துவிட்டிருக்கிறார் கவர்ச்சி நடிகை ஸ்ரீரெட்டி. இவர் பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறியவர்.
பூனம் கவுர் கூறிய குற்றச்சாட்டு பற்றி ஸ்ரீரெட்டி குறிப்பிட்டு,'யார் மீது குற்றம் சுமத்துகிறார் என்பதை தைரியம் இருந்தால் பூனம் கவுர் அந்த நபரின் பெயரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். மதில் மேல் பூனையாக இருக்கூடாது. துணிச்சலாக அந்த பெயரை சொன்னால் என்னுடைய கூட்டம் அந்த விஷயத்தை பார்த்துக்கொள்ளும்' என்றார்.
பூனம் கவுரை உசுப்பிவிட்டு அவரது கருத்தை தனக்கு சாதமாக பயன்படுத்தவே ஸ்ரீரெட்டி இப்படியொரு ஆதரவை தெரிவித்திருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே பவன் கல்யாணம் மீது ஸ்ரீரெட்டியும் புகார் கூறியவர் என்பது கவனிக்கத்தக்கது என திரையுலகினர் கூறுகின்றனர்.