நடிகை காஜல் அகர்வால் தற்போது இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஷங்கர் இயக்குகிறார். இந்நிலையில் நடிகை லட்சுமி மன்ச்சூ நடத்தும் பிரபல ஷோ ஒன்றில் பங்கேற்றார் காஜல். அவரிடம் உங்கள் திருமணம் எப்போது மற்றும் வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்றதற்கு பதில் அளித்தார்.
விரைவில் திருமணம் செய்துகொள்ள எண்ணியிருக்கிறேன். எனக்கு வரும் கணவர் எப்படியிருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது. அவர் என் மீது மிகவும் பாசம் கொண்டவராக இருக்கவேண்டும், கடவுள் பக்தி உள்ளவராக இருக்க வேண்டும். ஏனென்றால் நான் கடவுள் பக்தி கொண்டவள். நான் எங்கு சென்றாலும் என்னுடன் சிறிய அளவில் சிவன் சிலை இருக்கும்' என்றார் காஜல் அகர்வால்.
சினிமாவை பொறுத்தவரை யாரை கொல்லவிரும்புகிறீர்கள், யாரை மணக்க விரும்புகிறீர்கள் என்றதற்கு ராம் சரண், ஜூனியர் என்டிஆரை கொல்ல விரும்புகிறேன், பிரபாஸை மணக்க விரும்புகிறேன்' என்றார்.