மதுகுடிப்போர் சங்கத் தலைவருக்கு வேலூரில் கிடைத்த 2530 வாக்குகள்!

வேலூர் மக்களவை தொகுதியில் மது குடிப்போர் சங்கத் தலைவர் செல்லப்பாண்டியனுக்கு 2530 வாக்குகள் கிடைத்துள்ளது. Read More


வேலூர் மக்களவை தேர்தல்; விறுவிறுப்பான வாக்குப்பதிவு

வேலூர் மக்களவைத் தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். Read More


வேலூரில் அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது; கடைசி நாளில் பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்டமாக இன்று மாலை நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த ஒரு மாத காலத்தில் இந்தத் தொகுதியில் ரூ.3.57 கோடி பணம், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More


வாக்காளர்களின் சந்தை மதிப்பு என்ன போஸ்டர் போட்டு அசத்தல்!

மக்களவையில் 543 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான சுதந்திர இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் நாளை மறு நாள் நடைபெற இருக்கிறது. நீண்ட காலங்களுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக மோடியின் தலைமையில் ஆட்சி அமைத்தது அத்தனை எதிர்க்கட்சிகளையும் இந்த ஐந்து ஆண்டுகளில் பாடாய் படுத்தி விட்ட நிலையில், எப்படியும் பாஜகவை வீழ்த்துவோம் என திமுக, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளும், மீண்டும் மோடியை பிரதமராக்குவோம் என அதிமுக, பாமக போன்ற கட்சிகளும் களமிரங்கியுள்ளதாக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. Read More


கூட்டத்துக்கு கூட்டிட்டு வந்த ஆட்களுக்கு காசு தரல; வாய்த்தகராறு சண்டையில் முடிந்ததால் தேமுதிக நகரச் செயலாளர் அதிரடி கைது

மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜகவுடன் தேமுதிக கூட்டணி வைத்துள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, தீவிரப் பிரசாரத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈடுபட்டு வருகிறார். Read More


வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டி - சோலார் மோசடி புகழ் நடிகை தடாலடி அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் கேரளாவின் வயநாடு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கிய பிரபல நடிகை சரிதா நாயர் அறிவித்துள்ளார். Read More


`அமைச்சரா இருந்தாலும் நின்னு தான் போகணும்' - பொன்.ராதாகிருஷ்ணன் காரை சோதனையிட்ட அதிகாரிகள்

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆஸ்தான தொகுதியான கன்னியாகுமாரியில் நாடாளுமன்ற வேட்பாளராக இந்த முறையும் களமிறங்கியுள்ளார். இதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். Read More


`தேனி போயஸ் கார்டன் செண்டிமெண்ட்' - ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு `கை'கொடுக்குமா ஜெயலலிதா ராசி?

நான் எம்.பியானால் ஆறே மாதத்தில் ரயிலை வரவழைப்பேன் என தேனி தொகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தவாறு வேட்பு மனுதாக்கல் செய்தார் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். தொடர்ந்து தனது தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக தேனியிலேயே தங்கியிருக்கிறார். Read More


வெட்ட வெளியில்... சுட்டெரிக்கும் வெயிலில்...ஆடு, மாடுகளா வாக்காளர்கள்..? பிரச்சார யுக்திகள் மாறுவது எப்போது

எந்த ஆண்டும் இல்லாத அளவு வெயில் இப்போது கொளுத்துகிறது. வெயிலை விட எப்போதும் இல்லாத அளவுக்கு தேர்தல் களம் கொதிநிலைக்கு சென்றுள்ளது. இதில் தலைவர்கள் பிரச்சாரத்திற்கு கூட்டம் சேர்க்கிறேன் பேர்வழி என்று மகா பொது ஜன வாக்காளர்களை ஆடு, மாடுகளைப் போல் வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில் அமர வைப்பது தான் இந்தத் தேர்தலில் பெரும் கொடுமையிலும் கொடுமையாக உள்ளது. Read More


தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகை - 2 நாள் முக்கிய ஆலோசனை

தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.மக்களவை மற்றும் இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்றும் நாளையும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. Read More