இந்தியாவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் இப்போதைக்கு பொது சந்தையில் கிடைக்காது என்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற இந்த இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன.
இந்தியாவில் கொரோனா நோய் பாதித்து உயிரிழந்தவர்களில் 90 சதவீதம் பேர், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், உயிரிழப்பில் 69 சதவீதம் பேர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது.