பணம் திருடியதால் மகனை கயிற்றில் கட்டி பைக்கில் இழுத்து சென்ற தாய்: சீனாவில் பரபரப்பு

பெய்ஜிங்: வீட்டில் இருந்த பணத்தை திருடியதால், பெற்ற மகன் என்றுக்கூட பார்க்காமல் கையில் கயிற்றை கட்டி மோட்டார் சைக்கிளின் பின்னால் இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் ஷயோடாங் பகுதியில், லுடியான் கவுன்டி என்ற இடம் உள்ளது. இங்கு, ஒரு தாய் தனது இளைய மகனை மோட்டார் சைக்களின் பின்னால் கயிற்றால் கையை கட்டி இழுத்துச் சென்றார். கயிறு கட்டப்பட்ட நிலையில் இருந்த சிறுவன் தன்னை விடும்படி கதறி அழுதபடி இருந்தான்.

இந்த காட்சியை நேரில் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதில், ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, இணையதளத்தில வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து, போலீசார் சிறுவனின் தயாரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது, “தனது மகன் வீட்டில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாயை திருடிவிட்டான். திருடியதற்கான காரணம் குறித்தும், அதை எப்படி செலவு செய்தான் என்பது குறித்தும் மகனிடம் கேட்டபோது அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டான். அந்த பணம் தனது கணவனின் ஒருமாத சம்பளத்துக்கு இணையானது என்றார். மேலும், பணம் குறித்து பதில் கூறாத தனது மகனை இன்னும் 2 அல்லது 3 நாட்கள் இதுகுறித்து செய்யப்போகிறேன்” என தாய் மிரட்டி உள்ளார்.

இதற்கு பதிலளித்த போலீசார், “பிள்ளைகளை அதுபோன்று இனி செய்யக்கூடாது. வார்த்தைகளால் மிரட்டினால் போதும்” என அவருக்கு அறிவுரை கூறினார்.

You'r reading பணம் திருடியதால் மகனை கயிற்றில் கட்டி பைக்கில் இழுத்து சென்ற தாய்: சீனாவில் பரபரப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ''அதிமுக அரசுக்கு ஆக்கப்பூர்வமாக சிந்திக்கத் தெரியாது.." காரணம் சொல்லும் ராமதாஸ்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்