5 முறை முதல்வராக இருந்தவரிடம் வெறும் ரூ. 3,930 மட்டுமே உள்ளது - யார் அந்த முதல்வர் தெரியுமா?

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரிடம் வங்கிக் கணக்கில் 2,410 ரூபாயும், கையிருப்பாக 1,520 ரூபாயும் மட்டுமே உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்காரிடம் வங்கிக் கணக்கில் 2,410 ரூபாயும், கையிருப்பாக 1,520 ரூபாயும் மட்டுமே உள்ளதாக தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரி முன்னணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபையில் உள்ள 60 இடங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 18-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்நிலையில், இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த 1998-ம் ஆண்டில் இருந்து 4 சட்டசபை தேர்தல்களில் ஒரே தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில், மாணிக் சர்க்கார் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது வங்கிக் கணக்கில் 2,410 ரூபாயும், கையிருப்பாக 1,520 ரூபாயும், மொத்தமாக 3,930 ரூபாய் மட்டும் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம் வேறு வங்கிக் கணக்கோ, நிலமோ இல்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மத்திய அரசு ஊழியராக பணியாற்றி வரும் மாணிக் சர்க்காரின் மனைவி பாஞ்சாலி பட்டாச்சார்யா, தன் கையிருப்பாக ரூ.20,410 மற்றும் இருவேறு வங்கிக் கணக்குகளில் ரூ.1,24,101 மற்றும் ரூ.86,473 வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், நிலையான வைப்புத் தொகையாக ரூ.9.25 லட்சம் வைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

You'r reading 5 முறை முதல்வராக இருந்தவரிடம் வெறும் ரூ. 3,930 மட்டுமே உள்ளது - யார் அந்த முதல்வர் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இதற்கு எச்.ராஜா வாய் திறக்காதது ஏன்? எதிர்த்தால் சல்யூட் செய்வேன் - விஷால்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்