ஏமாற்றிய காதலனை பழிவாங்க பெண் விநோத முயற்சி: வைரலாகும் வீடியோ

தன்னை ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு, விநோதமாக பழிவாங்க போராடிய பெண்ணின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை அவரது காதலன் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இளம்பெண், தனது காதலனை பழிவாங்க முயன்று வித்தியாசமான செயலில் ஈடுபட்டார்.

நேரடியாக தனது காதலனின் வீட்டின் முன்பு சென்ற பெண், சத்தமாக பாட்டு போட்டு அவர் நடனமாட தொடங்கினார். அவர் குடித்துவிட்டு நடனமாடியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் மக்கள் கூட்டம் சேர்ந்தது. அங்கு சுற்றியிருந்தவர்கள் பெண்ணின் நடனத்தை வேடிக்கை பார்த்ததுடன் வீடியோவும் எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏமாற்றிய காதலன் அசிங்கப்பட வேண்டும் என்ற பழிவாங்கும் முயற்சியில் இளம்பெண் நடனமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதோ அந்த வைரலாகும் வீடியோ..

You'r reading ஏமாற்றிய காதலனை பழிவாங்க பெண் விநோத முயற்சி: வைரலாகும் வீடியோ Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போலி டாக்டரால் வந்த வினை: உ.பியில் 46 பேருக்கு எச்.ஐ.வி பாதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்