இந்தியாவிற்கு வந்துள்ள கனடா பிரதமரை சந்தித்தார் ராகுல்

புதுடெல்லி: சுற்றுப்பயணமாக குடும்பத்துடன் வந்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை ராகுல் காந்தி நேற்று சந்தித்து பேசினார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள கடந்த சனிக்கிழமை இந்தியா வந்தார். அப்போது, அவர் தனது மனைவி குழந்தைகளுடன் தாஜ்மகால், குஜராத்தில் உள்ள காந்தி ஆசிரமம், பஞ்சாப் பொற்கோவில் உள்பட பல்வேறு முக்கிய இடங்களை சுற்றி பார்த்தனர்.

கனடா பிரதமர் இந்தியாவிற்கு ஐந்து நாட்கள் ஆன நிலையில் பிரதமர் மோடி அவரை கண்டுக் கொள்ளவில்லை என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, பிரதமர் மோடி கனடா பிரதமரை நேற்று சந்தித்து பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி கனடா பிரதமரை நேற்று டெல்லியில் சந்தித்துள்ளார். இதுகுறித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை இன்று சந்தித்தேன். அவருடனான சந்திப்பில் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினோம். அவரது குடும்பத்தினரையும் சந்தித்தேன். எனது தாயார் சோனியா காந்தியின் உடல் நிலை குறிதது கேட்டறிந்தார். ஜஸ்ட்ன் ட்ரூடோவை சந்தித்தது மகிழ்ச்சி ” என்றார்.

You'r reading இந்தியாவிற்கு வந்துள்ள கனடா பிரதமரை சந்தித்தார் ராகுல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'சூப்பர் ஸ்டார்'!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்