தியேட்டர் நிறுவனங்கள் ஸ்டிரைக் எதிரொலி: ரூ.250 கோடி வருவாய் நஷ்டம்..

தமிழகத்தில், கடந்த 12 நாட்களாக திரையரங்கு நிறுவனங்கள் சார்பில் நடந்து வரும் ஸ்டிரைக்கால் சுமார் ரூ.250 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேவைக்கட்டணம் விவகாரத்தில் டிஜிட்டல் சேவை வழங்கும் க்யூப் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் பெரும் மோதல் எழுந்துள்ளது. இதனால், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டது. இவர்களை தொடர்ந்து, தியேட்டர் நிறுவனர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து, போராட்டத்தின் அடுத்தகட்டமாக வரும் 16ம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் எனவும், புதிய படங்கள் எதுவும் திரையிடப்படாது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த தொடர் 12 நாள் போராட்டம் எதிரொலியால் சுமார் ரூ.250 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading தியேட்டர் நிறுவனங்கள் ஸ்டிரைக் எதிரொலி: ரூ.250 கோடி வருவாய் நஷ்டம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முருங்கை தேங்காய் பால் குழம்பு ரெசிபி !!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்