ஐபிஎல் தொடர்: சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை அறிவிப்பு

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விலையின் விவரம் வெளியாகி உள்ளது.

இந்தியாவில், கிரிக்கெட் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாப்படும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7ம் தேதி தொடங்கி மே மாதம் 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் மும்பை அணி மோதுகிறது.

இந்த ஐபிஎல் போட்டியில், ஒவ்வொரு அணியும் தங்களது உள்ளூர் மைதானத்தில் 7 லீக் போட்டிகளில் விளையாடும். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணத்தின் விவரம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில், குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,300 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6,500 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டுகளை, இணையதளம் அல்லது கவுன்டர்கள் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading ஐபிஎல் தொடர்: சென்னை போட்டிகளுக்கான டிக்கெட் விலை அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - போரூர் முருகன் கோவிலில் பங்குனி உத்தரம் திருவிழா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்