சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு இல்லை

வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புகளுக்கான தேர்வு கடந்த மாதம் நடைபெற்றது. அப்போது, 12ம் வகுப்பின் பொருளாதார பாடத்திலும், 10ம் வகுப்பின் கணித பாடத்திற்கான தேர்வுக்கு முன்னதாகவே கேள்வித்தாள் வாட்ஸ் அப்பில் கசிந்தததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 10ம் வகுப்பு கணித பாடத்திற்கும், 12ம் வகுப்பு பொருளாதாரம் பாடத்திற்கு மறுதேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.

தொடர்ந்து, 12ம் வகுப்பு பொருளாபதார பாடத்திற்கான மறுதேர்வு வரும் ஏப்ரல் மாதம் 25ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

இதற்கிடையே, சிபிஎஸ்இ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மாணவர்கள், பெற்றோர், சிபிஎஸ்இ அதிகாரிகள், பயிற்சி வகுப்புகளை நடத்துவோர் உள்பட 50 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தனர். இதில், 9 சிறுவர்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு சிபிஎஸ்இ 10ம் வகுப்பு கணித மறுதேர்வு நடத்தப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading சிபிஎஸ்இ: 10ம் வகுப்பு கணித பாடத்திற்கு மறுதேர்வு இல்லை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ’பிக்பாஸ் சோப்ரா’வின் நிர்வாண போஸ் - கதிகலங்கும் சமூகவலைத்தளம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்