அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி பார்பரா புஷ் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். இவரது மனைவி பார்பரா புஷ் (92). இவர்களது மகன் ஜார்ஜ் வாக்கர் புஷ் (71). இவர், 43வது அதிபராக பதவி வகித்தவர்.

இந்நிலையில், பார்பரா புஷ்ஷிற்கு வயது முதர்வு காரணமாக உடல் நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர் படுத்த படுக்கையாக கிடந்தார். பார்பரா புஷ்ஷிற்கு சிகிச்சை அளித்த நிலையிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பார்பரா புஷ் தனது 92 வது வயதில் இன்று மரணமடைந்ததாக முன்னாள் அதிபர் குடும்பத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்சின் மனைவி மரணம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஸ்டண்ட் கலைஞர்களுக்காக ரத்த தானம் செய்த விஜய் சேதுபதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்