வார்த்தைப் போரில் ட்ரம்ப்- ட்ருட்! அமெரிக்கா- கனடா உறவில் விரிசல்

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் சச்சரவு நிலவி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கனடா பிரதமரை எதிர்மறையாகவே விமர்சித்து வருகிறார்.

கடந்த மாதம் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியம் ஆகியவற்றுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் செய்யதது அமெரிக்க அரசு. இந்த வரி அதிகரிப்பை திரும்ப பெற வலியுறுத்தி கனடா பிரதமர் ட்ரூட், ட்ரம்ப்க்கு போன் மூலம் வலியுறுத்தினார்.

அப்போது, `நீங்கள் வெள்ளை மாளிகையை கொளுத்தினீர்கள்தானே؟' என்று ட்ரம்ப், ட்ரூட்டிடம் முறையிட்டதாக `தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டது. இது, நகைச்சுவையாக சொல்லப்பட்டதா அல்லது, ட்ரூடுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சொல்லப்பட்டதா என்பது குறித்து தெளிவு இல்லை.

ஆனால், வெள்ளை மாளிகை 1812-ம் ஆண்டு தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக ஆக்கப்பட்டது. அப்போது, பிரிட்டிஷ் அரசுக்கும் அமெரிக்க அரசுக்கும் இடையில் போர் நிலவியது. அந்த நேரத்தில் தான், பிரிட்டிஷால் வெள்ளை மாளிகை கொளுத்தப்பட்டது. இந்தப் போருக்கு முன்னர், அமெரிக்கா, பிரிட்டிஷ் காலனியாக இருந்த கனடாவை தாக்கியது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான், கனடாவிலிருந்து வந்த பிரிட்டிஷ் வெள்ளை மாளிகைக்கு தீ வைத்தது. இந்தப் போர் முடிந்து பல ஆண்டுகள் கழித்து, 1867-ம் ஆண்டு தான் கனடா என்ற நாடே உருவானது. இது ஒரு புறமிருக்க, கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தை கைவிடுமாறு ட்ரம்ப், ட்ரூடுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால், இதற்கு அடிபணிய ட்ரூட் மறுத்துவிட்டார். 

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

 

You'r reading வார்த்தைப் போரில் ட்ரம்ப்- ட்ருட்! அமெரிக்கா- கனடா உறவில் விரிசல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பிரதமர் நரேந்திர மோடியை கொல்ல சதியா ?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்