அமெரிக்கா சாண்டோ மோனிகா - கலிபோர்னியாவில் அந்தரத்தில் தொங்கிய கார்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், சாண்டா மோனிகாவில் நான்காவது மாடியிலிருந்து தவறி விழ இருந்த கார் தப்பியது. அதனுள் இருந்த முதிய பெண்ணும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடந்த திங்கட்கிழமை இந்த சம்பவம் நடந்தது.
சாண்டா மோனிகாவில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தியிருந்த முதிய பெண், பிரேக்கிற்கு பதிலாக தவறுதலாக ஆக்ஸிலேட்டரை அழுத்திவிட்டார். இதனால் அந்த கார், தடுப்பை உடைத்து, கீழ்நோக்கி தொங்கிய நிலையில் நின்றது. அப்போது சம்பவ இடத்தில் இருந்த பிரான்ஸை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர், காரிலிருந்த மூதாட்டியை காப்பாற்றினார்.
சாண்டோ மோனிகா தீயணைப்பு துறையினர், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்த காரை மீட்டனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.

You'r reading அமெரிக்கா சாண்டோ மோனிகா - கலிபோர்னியாவில் அந்தரத்தில் தொங்கிய கார்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மணமணக்கும் தேங்காய்ப்பால் ரசம் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்