காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் இன்று முதல் சேவை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதையில் இன்று முதல் ரயில் சேவை தொடங்கியது.

காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த பணி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் நிறைவு பெற்றது.

இந்நிலையில், காரைக்குடி - பட்டுக்கோட்டை இடையிலான அகல ரயில் பாதையில் இன்று ரயில் சேவை தொடங்கியது. காலை 6 மணிக்கு காரைக்குடியில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு பட்டுக்கோட்டை சென்றடையும். தொடர்ந்து, பட்டுக்கோட்டையில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 7.30 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.

மேலும், இந்த ரயில் தற்போதைக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

You'r reading காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதையில் இன்று முதல் சேவை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுச்சேரி பட்ஜெட்... எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்