கூகுள் நிறுவனத்தில் இந்திய மாணவருக்கு பணி: சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலகளவில் நடத்திய நேர்முகத் தேர்வில் வெற்றிப்பெற்ற இந்திய மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1.2 கோடி சம்பளத்தில் கூகுள் நிறுவனம் பணி வழங்கி உள்ளது.

பிரபல கூகுள் நிறுவனத்தை விரிவுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய ஆராச்சிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, இந்தியா உள்பட பல நாடுகளில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. இதில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த துறையில் 50 பேர் தேர்வாகினர்.

இதில், இந்தியா பெங்களூரை சேர்ந்த ஆதித்யா பாலிவால் என்ற மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஆண்டிற்கு ரூ.1.20 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து, வரும் 16ம் தேதி முதல் பணியில் சேர ஆதித்யா தயாராகி உள்ளார்.

You'r reading கூகுள் நிறுவனத்தில் இந்திய மாணவருக்கு பணி: சம்பளம் எவ்வளவு தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 3வது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்