திருப்பதி: லிஃப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு

திருப்பதியில் லிஃப்ட் கதவு தானாகத் திறந்ததால் இஸ்ரோ பெண் அதிகாரி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் மூத்த அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் வசந்தி. இவர் திருப்பதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இஸ்ரோவில் இருந்து திருப்பதிக்கு வந்தார் வசந்தி. இன்று மதியம் அவர் வீடு இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் மூன்றாவது மாடியிலிருந்து கீழே இறங்குவதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது லிப்ட் மேலே வருவதற்குள் கதவு மட்டும் தானாகத் திறந்தது. லிப்ட் மேலே வந்ததாக நினைத்து வசந்தி உள்ளே கால் வைத்தார். லிப்ட் மேலே வராத நிலையில் நிலையில் தவறி கீழே விழுந்தார். மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த வசந்தி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கட்டிடத்தில் உள்ள லிப்ட் பல மாதங்களாகப் பழுதாகிய நிலையிலேயே இயக்கப்பட்டு வந்ததாம். குடியிருப்பு வாசிகள் உரிமையாளருக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

You'r reading திருப்பதி: லிஃப்ட் விபத்தில் இஸ்ரோ பெண் அதிகாரி உயிரிழப்பு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய அரசின் இ-சம்பதா செயலி வெளியீடு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்