நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி தற்கொலை

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி தற்கொலை!

நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி அனிதா, மருத்துவராக முடியாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலுார் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரைச் சேர்ந்த மூட்டைதூக்கும் தொழிலாளி சண்முகத்தின் மகள் அனிதா. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அவரின் கட் ஆப் மார்க் 196.5. தற்போது, நீட் தேர்வில் பாஸானால் மட்டும்தான் மருத்துவராக முடியும் என்கிற நடைமுறையை மத்திய அரசு அமல்படுத்தியிருக்கிறது. அனிதாவால் நீட் தேர்வில் 86 சதவிகித மதிப்பெண்களை மட்டுமே பெற முடிந்தது. . இதனால் அவரின் மருத்துவக் கனவு நனவாகிற வாய்ப்பை இழந்தார்.

கடந்த வாரம் கால்நடை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ஆனால், மருத்துவம் என்பதையே குறிக்கோளாகக் கொண்டிருந்த அனிதா இதனால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார்.

You'r reading நீட் தேர்வுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மாணவி தற்கொலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மும்பையில் வரலாறு காணாத மழை; தவிக்கும் மக்கள்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்