கொரானா காலத்தில் வீட்டிலேயே பேசியல் -பத்து நிமிட வேலை

Facial at Home

இன்றைய காலகட்டத்தில் உலக சரித்திரமே கொரானாவிற்கு முன்பு ,பின்பு என மாறினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.பெண்கள் தங்கள் அழகு பாதுகாப்பு சம்பந்தமான காரியங்களை கொரானாவிற்கு முன் ,பின் என பிரித்து பார்க்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

கொரானாவிற்கு முன் மாதந்தோறும் திரேட்டிங் ,வேக்சிங் ,ஹேர் கட் மற்றும் பேசியல் என தங்கள் அழகை மெருகுட்டியவர்கள், இன்று எங்கும் நகர முடியாமல் சோசியல் மீடியாக்களில் வரும் அழகு குறிப்புகளை வைத்து தங்கள் முகத்தை புண்ணாக்கி கொண்டிருக்கிறார்கள்.இந்த அவதியில் இருந்து மீள உங்களுக்கோர் ஆலோசனை.

"தன் கையே தனக்குதவி" என்பதுபோல பெண்களின் மிருதுவான நகங்களே பின்வரும் பத்து நிமிட பேசியலுக்கு உறுதுணையாக இருக்கும்.

செய்முறை :

1) குளித்து முடிக்கும்போது தங்கள் நகங்களால் உதடு,கன்னங்கள்,நெற்றி,கழுத்து மற்றும் காது பகுதிகளை மெதுவாக சுரண்டி விட வேண்டும் .இவ்வாறு செய்யும் பொழுது முகத்தில் உள்ள துளைகளின் வழியே வெண்ணிற அழுக்குகள் வெளிவர ஆரம்பிக்கும்.ஈரப்பதமாக முகம் இருப்பதால் வலி இருக்காது.பேசியலின் முதல் படியான ஸ்க்ரப்பிங் முடிந்தது

2) இரண்டாவது கஸ்தூரி மஞ்சள் அல்லது பாசிப்பயிறு மாவு கொண்டு முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி 5 நிமிடத்திற்கு பின் கழுவ வேண்டும்.

3) இறுதியாக துண்டால் முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் சற்று அழுத்தம் கொடுத்து தேய்த்தால் முகம் தங்கத்தாமரை போல் மிளிர ஆரம்பிக்கும்.

வாரம் இருமுறை இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் பேசியலுக்காக அழகுநிலைய பக்கமே செல்ல தேவையில்லை.

You'r reading கொரானா காலத்தில் வீட்டிலேயே பேசியல் -பத்து நிமிட வேலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மேலாடையை தொலைத்த நடிகைக்கு அட்வைஸ்.. இப்படி கூடவா அஜாக்கிரதையா இருக்கிறது..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்