முகம் பொலிவு அடைய அரிசி நீர் உதவுமா??வாங்க பாக்கலாம்

how to face brighten using rice water

அரிசி நீரை பயன்படுத்தியதால் மட்டுமே முன்னோர்களின் சருமம் ஆரோக்கியமாக இருந்தது... அரிசியை வேக வைக்கும் போது சிறிது அளவு மாவை வெளியிடுகிறது.அந்த காலத்தில் இதனை “அரிசி கஞ்சி” என வழங்கப்பட்டது.இது நாளடைவில் மருவி “அரிசி நீர்” என பெயர் பெற்றது. எத்தனை நாள் தான் கெமிக்கல் நிறைந்த மற்றும் விலை உயர்ந்த அழகு பொருள்களை உபயோகப்படுத்தி நம் சருமத்தை கெடுத்து கொள்ளபோகிறோம். நம் கையில் இருக்கும் வெண்ணையை அறிந்து சிந்தித்து செயல்படுங்கள். அரிசி நீர் அழகை மட்டும் மேம்படுத்தாமல் உடல் ஆரோக்கியத்தையும் சீர் செய்கிறது.சில சமயம் மக்கள் இதனை உணவாகவும் சாப்பிட்டு வந்தனர். இயற்கையான முறையில் முகம் பொலிவு அடைய சில குறிப்புககளை பார்ப்போம்:-

இயற்கையில் ஸ்கின் டோனர்:-

முக பொலிவுக்கு நாம் கண்மூடித்தனமாக கெமிக்கல் டோனரை தான் பயன்படுத்துவோம்.இதனால் சருமத்தில் இருந்த ஆரோக்கியம் சிறுது சிறிதாக குறைந்து பக்க விளைவுக்கு ஆளாகிறது.இதனை தவிர்க அரிசியை வேக வைத்த தண்ணீரை முக டோனராக பயன்படுத்துங்கள்.இதனால் முகம் மென்மையாகவும்,பொலிவாகவும் இருக்கும்.

சுத்தமான சருமதிற்கு:-

அரிசி தண்ணீரால் நம் முகத்தில் உள்ள அழுக்கு செல்களை முழுவதுமாக அழித்து சருமத்தை முகப்பருக்களில் இருந்து பாதுகாக்கிறது.தினமும் 15-20 நிமிடம் முகத்தில் அரிசி நீரை உபயோகித்தால் அழகான முகத்திற்கு நாமே சொந்தக்காரர்கள்.எந்த வித சருமை பிரச்சனைகளும் நம்மை சீண்டாது.

கூந்தலின் நன்மைக்கு:-

அரிசி நீர் கூந்தலின் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.இதில் இனோசிட்டால் என்ற சக்தி உள்ளதால் முடியின் வளர்ச்சிக்கு தூண்டுதலாக விளங்குகிறது.கூந்தலை வழுவழுப்பாகவும் வைக்க உதவுகிறது.இறந்த செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களை அதிக படுத்துகிறது.

அரிசி நீரை குடிப்பதால் உடல் ஆரோக்கியமும்,சருமத்திற்கு பயன்படுத்துவதால் முக பொலிவும் தருகிறது.இதனால் அரிசி நீர்,”ஆல் இன் ஆல்” தேவைகளாக திகழ்கிறது.



You'r reading முகம் பொலிவு அடைய அரிசி நீர் உதவுமா??வாங்க பாக்கலாம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஓணம் கொண்டாட தனி விமானத்தில் காதலனுடன் பறந்த பிரபல நடிகை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்