மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிறு வலியா??அப்போ இதனை செய்யுங்கள்..

remedy for stomach pain in periods time

மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காலத்தில் பெண்கள் மிகுந்த வயிறு வலியில் துன்பப்படுகின்றனர்.இதனால் வயிறு வலியை நீக்க சிலர் கெமிக்கல் நிறைந்த மாத்திரியை பயன்படுத்தி பக்கவிளைவில் சிக்கிகொள்கின்றனர். ஒவ்வொரு முறையும் மாதவிடாய் வரும் பொழுது ஏன் தான் பெண்ணாக பிறந்தோமோ ?? என்று புலம்பி தள்ளுவார்கள்…இதனால் இயற்கை முறையில் வயிற்று வலியை போக்க சில குறிப்புகளை காணலாம்.

மசாஜ் செய்யுங்கள்:-

மாதவிடாய் காலத்தில் உடம்பில் வெப்பம் அதிகமாக காணப்படும்.இதனை தணிக்க நல்லெண்ணெயை கொண்டு அடி வயிற்றில் மசாஜ் செய்யுங்கள்.. நல்லெண்ணெயில் உள்ள லினொலிக் அமிலம் வெப்பத்தை விலக்கி வயிற்று வலியை குறைக்கும்..

வெந்தய நீர்:-

உடம்பில் சாதாரண வயிறு வலி ஏற்பட்டாலும் பாட்டி வைத்தியமான வெந்தய நீரை குடிக்க சொல்லுவார்கள்.அதுபோல மாதவிடாய் நேரத்திலும் வெந்தய நீரை பருகினால் வயிறு வலி குறைந்து குளிர்ச்சியாக காணப்படும்.

வெந்நீர் மசாஜ்:-

மாதவிடாய் காலத்தில் சூடாக எது சாப்பிட்டாளும் அடி வயிற்றுக்கு இதமாக இருக்கும்.இந்த நேரத்தில் பெண்கள் பெரும்பாலும் வெந்நீரீல் தான் குளிப்பார்கள்.இதுபோல கடையில் கிடைக்கும் ஹாட் வாட்டர் பேக்கை வைத்து அதில் வெந்நீர் நிரப்பி அடி வயிற்றில் மசாஜ் செய்தால் வயிறு வலி நீங்கும்..

இது போல வீட்டில் கிடைக்கும் பொருள்களை வைத்து வயிற்று வலியை குறைக்கலாம்…

You'r reading மாதவிடாய் காலத்தில் கடுமையான வயிறு வலியா??அப்போ இதனை செய்யுங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரளாவில் இரவு நேரங்களில் பெண்களை தனியாக ஆம்புலன்சில் கொண்டு செல்ல தடை

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்