பெண்களே!!! முகத்தில் ரோமம்nbspவளருதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்..

பெண்கள் என்றாலே அழகுதான். தங்களின் அழகை பராமரிக்க பெண்கள் எவ்வளவோ மெனக்கட்டு பாதுகாக்கின்றனர். அப்படி இருக்கையில் பெண்கள் முகத்தில் ரோமம், முளைத்தால் நல்லாவா இருக்கும்.. அதனால், பெண்கள் முகத்தில் வளரும் தேவை இல்லாத முடிகளை அகற்றுவதற்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.  

கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள் இது ஒரு பாரம்பரிய முறை என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையை அக்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்ன முறையெனில், கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

பப்பாளி மற்றும் மஞ்சள் பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்..

You'r reading பெண்களே!!! முகத்தில் ரோமம்nbspவளருதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கடல் வற்றி கருவாடு சாப்பிட நினைத்து குடல் வற்றி கொக்கு செத்த கதை திமுக கதை - ஜெயக்குமார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்