செலவே இல்லாத எளிமையான அழகு குறிப்புகள்

Simple beauty Tips

அழகாக இருக்க எல்லாருக்கும் ஆசைதான். பணக்காரர்கள் அதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்வார்கள் ஆனால் ஏழைகளால் என்ன செய்ய இயலும். கவலை வேண்டாம் வீட்டுப் பொருட்களை வைத்து நம் அழகை அதிகரிக்கலாம் வாங்க.

பேஸ் மாஸ்க்:

ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் உடன் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், உங்களுடைய முகம் பொலிவுறும்.

ஆரஞ்சு பழத்தோல்:

ஆரஞ்சு பழத் தோல்கல்ளை சேகரித்து அதை சூரிய ஒளிப் படும்படி காய வைக்கவும்.

காய்ந்தப் பழத்தோலை மிக்ஸியில் பொடியாக அரைத்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால், உங்கள் முகம் பொலிவுறும்.

முகப்பரு குணமாக:

தேனோடு சிறிது மஞ்சள் கலந்து, முகப்பரு மீது தடவும் போது, முகப்பரு நாளடைவில் மறையும்.

முடி உதிர்வைத் தடுக்க:

பெரிய நெல்லிக்காயை ஊற வைத்த தண்ணீரில் தலைக்கு குளிக்கும் போது, முடியின் வேருக்கு உறுதியளிக்கிறது.

தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் முட்டை, மூன்றையும் ஒன்றாக கலக்கி, முடி மற்றும் வேர்களில் படும்படி தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால்,முடி உதிர்வு குறையும்.

உங்கள் உதடு வறண்டு இருக்கிறதா?

உங்கள் உதட்டின் மேல்  தேனை தடவி சிறிது நேரம் விடவும்.

இப்பொழுது, தேன் தடவிய உதட்டின் மீது வாஸ்லீனை தடவி 10-15 நிமிடங்கள் விடவும். இதனால் உங்கள் உதடு மென்மையாகவும் அழகாகவும் ஜொலிக்கும்.

முகப்பரு குணமாக:

கருஞ்சீரகத்தை பொடியாக்கி, மஞ்சளோடு கலந்து, பசைப்போல் செய்து முகப்பரு மீது தடவ, முகப்பரு குணமாகும்.

ஒரு நாளைக்கு மூன்று முறை முகம் கழுவவும்.

You'r reading செலவே இல்லாத எளிமையான அழகு குறிப்புகள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரேபிஸ் நோய்: மதுரை அரசு மருத்துவமனை மீது குற்றச்சாட்டு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்